2000-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் தற்போது அதன் மதிப்பு எவ்வளவு?
24 ஆண்டுகளுக்கு முன்பாக நீங்கள் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தால் அதன் இன்றைய மதிப்பை பார்க்கலாம்.
தங்கமானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சர்வதேச சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை தினந்தோறும் மாறுபட்ட விலைகளில் விற்கப்படும்.
இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. அந்தவகையில், இன்று தங்கத்தின் விலை சென்னையில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.7060 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.56,480 -க்கு விற்கப்படுகிறது.
24 ஆண்டுகளுக்கு முன்பு
2000 -ம் ஆண்டில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ.440-ஆக மட்டுமே இருந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.3520 ஆகும்.
இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்க விலையை விட சவரன் விலை அப்போது குறைவு தான். அதாவது 2000-ம் ஆண்டிலிருந்து 2024-ம் ஆண்டு வரை தங்கத்தின் விலை 1636.59 % வரை அதிகரித்துள்ளது.
நீங்கள் 2000 -ம் ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு தங்கம் வாங்கியிருந்தீர்கள் என்றால் 28 சவரனுக்கு நகை வாங்கியிருப்பீர்கள். அதாவது தோராயமாக ரூ.98,560-க்கு வாங்கியிருப்பீர்கள்.
இன்றைய நிலவரப்படி 2024 -ம் ஆண்டில் 1 லட்ச ரூபாய்க்கு தங்கம் வாங்கியிருந்தால் 28 சவரன் தங்கத்தின் மதிப்பு 17,10,464 ரூபாயாக உயர்ந்திருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |