பொம்மை தயாரிப்பதாக பொருளை வாங்கி வெடிகுண்டு தயாரித்தேன்: சரணடைந்த நபரின் வாக்குமூலம்
இந்திய மாநிலம், கேரளாவில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய டொமினிக் மார்ட்டினின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளா குண்டுவெடிப்பு
கடந்த 29 -ம் திகதி கேரளாவில் கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள சர்வேதேச மாநாட்டு அரங்கில் கிறிஸ்தவ பிரிவின் கீழ் யெகோவாவின் சாட்சிகள் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. அங்கு, அவர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கிய சில நிமிடங்களிலேயே குண்டு வெடிப்பு நடந்தது.
உடனே, பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சரணடைந்த நபர்
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் பொலிஸில் சரணடைந்தார். அவரை பொலிஸார் கைது செய்தவுடன், என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் 29 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர், குண்டு வெடிப்புக்கு தேவையான வெடிபொருள்களை தயாரித்த விவரங்களை பற்றி கூறினார். மேலும், குண்டு வெடிப்பின் போது தீப்பற்றி எரிந்த காட்சிகளையும் அவர் காண்பித்தார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வைத்தது டொமினிக் மார்ட்டின் என்பதை என்.ஐ.ஏ அதிகாரிகள் உறுதி செய்தனர்.
பொம்மை தயாரிக்க பொருள்
மேலும், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதற்காக டொமினிக் மார்ட்டினின் வீடு மற்றும் குண்டுவெடிப்பு நடந்த இடம், குண்டு தயாரிக்க பொருள்கள் வாங்கிய இடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன.
பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிக்க செய்ய ரிமோர் கண்ட்ரோலையே டொமினிக் மார்ட்டின் பயன்படுத்தியுள்ளார். அதுவும், தனது வீட்டு மாடியில் யாருக்கும் தெரியாமல் வெடிகுண்டை தயாரித்துள்ளார். வெடிகுண்டை தயாரிப்பதற்கான மூலப்பொருள்களை எர்னாகுளத்தில் உள்ள கடையில் வாங்கியுள்ளார்.
குழந்தைக்கு பொம்மை தயாரிக்க தேவை என எலக்ட்ரானிக் பொருள்களை வாங்கியுள்ளார். மேலும், தன் மீது சந்தேகம் வரமால் இருக்க பல கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்கியுள்ளார்.
பின்பு, வீட்டில் வைத்து வெடிகுண்டு தயாரித்து பையில் வைத்து வெளியில் கொண்டு சென்றுள்ளார். அப்போது, லாட்ஜில் அறையை எடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக டொமினிக் மார்ட்டின் வீடியோ வெளியிட்டார்.
இந்த விவகாரத்தில் டொமினிக் மார்ட்டினுக்கு வரும் 29 -ம் திகதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |