இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம்
பிரித்தானிய நகரமொன்றில் வாழ்பவர்களில், சுமார் 50 சதவிகிதம் பேர் பிரித்தானியர்கள் அல்ல, அவர்கள் புலம்பெயர்ந்தோர்.
இப்படி எங்கு பார்த்தாலும் புலம்பெயர்ந்தோரே காணப்படுவதால், இது இங்கிலாந்து போலவே இல்லை என்கிறார் அங்கு வாழும் பிரித்தானியர் ஒருவர் கோபத்துடன்!
பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர்
பல ஆண்டுகளாகவே பிரித்தானியா புலம்பெயர்தலை ஒரு தொல்லையாக பார்த்துவருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஹொட்டல்களில் புலம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்படும் விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இங்கிலாந்திலுள்ள ஒரு நகரத்தில் வாழ்பவர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் புலம்பெயர்ந்தோர் என்பதால், அங்குள்ள சிலரது பேச்சில் புலம்பெயர்தல் குறித்த வெறுப்பு வெளிப்படுவதை உணரமுடிகிறது.
அந்த நகரம், இங்கிலாந்திலுள்ள Bournemouth. விடயம் என்னவென்றால், இந்த நகரம் சுற்றுலாவுக்கு பிரபலமான ஒரு நகரம்.
பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதால், அவர்களை உபசரிக்க அந்தந்த நாட்டவர்களான பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆக, புலம்பெயர்ந்தோரும் இங்கு அதிகமாகவே வாழ்கிறார்கள்.

குற்றம் செய்து தண்டனை அனுபவித்தவர்கள் இனி இதெல்லாம் செய்ய முடியாது: பிரித்தானியாவில் கடுமையாகும் சட்டங்கள்
ஆனால், அது இங்கு வாழும் பிரித்தானியர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை. எங்கள் நாட்டில் அடிக்கடி வேறு நாட்டு மொழியில் மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது, அது எங்களுக்கு அசௌகரியமாக உள்ளது. இங்கு அதிகம் வெள்ளையர்களைப் பார்க்க முடியவில்லை. வெளியிலிருந்து வருபவர்கள் இங்கு பிறந்தவர்களைவிட அதிகம் இருக்கிறார்கள் என்கிறார் ஒரு பெண்.
பிரெக்சிட்டுக்குப் பின், Bournemouthஇலுள்ள ஹொட்டல்களில் வேலை செய்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் எல்லாம் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிவிட, இப்போது தெற்காசியர்கள்தான் இங்கு அதிகம் பணி செய்கிறார்கள்.
ஒரு பெண், இது இங்கிலாந்து போலவே இல்லை என்று கூற, அதே நேரத்தில் அதே Bournemouthஇல் வாழும் மற்றொரு பிரித்தானியர், இங்குள்ளவர்களுக்கு இதேவேலைதான், அவர்களுக்கு வெறுக்க யாராவது வேண்டும்.
முன்பு போலந்து நாட்டவர்கள் தங்கள் வேலைகளைப் பறித்துக்கொண்டதாக குறைகூறினார்கள். இப்போது, அகதிகள் மீது வெறுப்பைக் காட்டுகிறார்கள் என்கிறார்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இரண்டு ஹொட்டல்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்கிறார் Colin.
என்னைப் பொருத்தவரை, இங்கு புலம்பெயர்ந்தோரால் இங்கு பிரச்சினை எதுவும் இல்லை என்கிறார் அவர்.
பிரச்சினை என்னவென்றால், புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக அதிக பணம் செலவிடப்படுவதே மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் Colin.
சிலர் இப்படி புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக பேசினாலும், புகலிடக்கோரிக்கையாளர்கள் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள விடயம் குறித்த எதிர்ப்பு மட்டும் குறைந்தாற்போல் தெரியவில்லை என்பதை மறுக்கமுடியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |