பிரித்தானியாவில் குன்றின் பாதையில் கிடந்த மனித உடல் எச்சங்கள்: 2 பேரை கைது செய்த பொலிஸார்
பிரித்தானியாவின் போர்ன் மவுத் அருகே உள்ள குன்றின் பக்க பாதை பகுதி ஒன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து 2 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட மனித எச்சம்
பிரித்தானியாவின் போர்ன் மவுத் அருகே உள்ள குன்று ஒன்றின் பக்க பாதையில் ஆகஸ்ட் 26ம் திகதி உயிரிழந்த மனித உடல் எச்சங்கள் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆகஸ்ட் 26ம் திகதி பிற்பகல் 1.10 மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
BournemouthEcho/BNPS
பின்னர் சம்பவ இடத்தை ஆய்வு செய்த பொலிஸார், போஸ்கோம்பே கடற்கரைக்கு செல்லும் பாதையில் மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தினர்.
கொலை விசாரணை தொடங்கப்பட்டதை அடுத்து, கிடைத்த மனித உடல் எச்சங்களை கொண்டு கொலை செய்யப்பட்டவர் போர்ன்மவுத்-ஐ சேர்ந்த 49 வயதுடைய நபர் என்று தெரியவந்துள்ளது.
2 பேர் கைது
ஆனால் 49 வயதுடைய நபரின் பெயர் மற்றும் விவரங்களையும், எதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற காரணத்தையும் பொலிஸார் வெளியிடவில்லை.
இதற்கிடையில் ஆகஸ்ட் 26ம் திகதி நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபராக கருதப்படும் 2 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |