பிரித்தானிய கடற்கரை ஒன்றில் நடந்த கோர சம்பவம்: பதின்ம வயது நபர் கைது
பிரித்தானியாவின் Bournemouth கடற்கரையில் பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பதின்ம வயது நபர் கைதாகியுள்ளார்.
34 வயது பெண் ஒருவர்
நேற்றிரவு Durley Chine கடற்கரை பகுதியில் பெண்கள் இருவர் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
Poole பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் கொல்லப்பட, 38 வயதான பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் நடந்ததாக கூறப்படும் கடற்கரை பகுதியானது பொலிசாரால் மூடப்பட்டது. இந்த நிலையில், லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று டோர்செட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொலை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது, கத்தியால் தாக்கியது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு இந்த விவகாரம் குறித்து உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிக மோசமான சம்பவம்
சம்பவம் நடந்த பகுதியில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி விரிவான விசாரணையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் Sir Conor Burns தெரிவிக்கையில்,
இன்னொரு கொடூரமான மிக மோசமான சம்பவம். இந்த விவகாரம் தொடர்பில் அவர்கள் என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதை காவல்துறையிடம் இருந்து விரைவாக அறிந்துகொள்ள விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |