சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட பள்ளி சிறுவனின் உடல்: மாணவர்கள் செய்த கொடூர செயல்
இந்திய மாநிலம் டெல்லியில் 12 வயது சிறுவனின் உடல், சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட உடல்
டெல்லியின் படார்பூர் பகுதியிலுள்ள அரசு பள்ளி அருகே உள்ள சாக்கடையில் 12 வயது சிறுவனது உடல் மிதந்துள்ளது.
இதனை தொடர்ந்து புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற படார்பூர் காவல்துறையினர் சிறுவனது உடலை மீட்டுள்ளனர். மேலும் அந்த உடல் அதே பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவனுடையதென தெரிய வந்துள்ளது.
@ani
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடலை, பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் கடினமான பொருளால் தாக்கப்பட்டத்தில் தலையில் அடிபட்டு உயிரிழந்திருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.
காட்டி கொடுத்த மாணவன்
இந்நிலையில் காவல்துறை நடத்திய விசாரணையில், அதே பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து புகை பிடிக்கும் போது அந்த மாணவர் பார்த்துள்ளார்.
@times of india
அவர் நேராக சென்று பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் ஆசிரியர் அந்த இரண்டு மாணவர்களையும் அழைத்து தண்டித்துள்ளார்.
குற்றவாளிகள் கைது
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சிறுவனை தனியாக அழைத்து சென்று மழுங்கிய பொருளால் பலமாக தாக்கியுள்ளனர்.
@wikipidea
இதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்து விட, என்ன செய்வெதென தெரியாமல் திகைத்த மாணவர்கள் சிறுவனை அருகிலிருந்த சாக்கடையில் மூழ்கடித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.