பால்கனியின் 60வது மாடியிலிருந்து விழுந்த பிரித்தானிய சிறுவன்: 2 வார கோமாவிற்கு பிறகு கண் விழிப்பு

United Kingdom Spain Accident
By Thiru Nov 24, 2026 10:48 PM GMT
Report

Boy, 17 fall from Benidorm balcony opens eyes after 2 weeks: ஸ்பெயின் நாட்டில் ஹோட்டல் பால்கனி மாடியில் இருந்து விழுந்த பிரித்தானிய சிறுவன்  2 வாரங்களுக்கு பிறகு கண் விழித்து உள்ளார்.

2 வாரங்களுக்கு பிறகு கோமாவில் இருந்து கண்விழித்த சிறுவன்

ஸ்பெயினின் பெனிடோர்ம் (Benidorm) நகரில் நடைபெற்ற 'ஃபியஸ்டா வார' கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய குடும்பத்தினருடன் 10 நாள் சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய சிறுவன் ஹோட்டல் பால்கனியில் இருந்து 60 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க கடைசி பெயர் வெளியிடப்படாத ஜேமி(Jaime) என்ற அந்த 17 வயது சிறுவன் 'சோல் பெலிகானோஸ் ஓகாஸ்' (SOL Pelícanos Ocas) என்ற ஹோட்டலின் ஆறாவது மாடி பால்கனியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்து கடந்த 2 வாரங்களாக கோமா நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

பால்கனியின் 60வது மாடியிலிருந்து விழுந்த பிரித்தானிய சிறுவன்: 2 வார கோமாவிற்கு பிறகு கண் விழிப்பு | Boy 17 Fall From Benidorm Balcony Opens Eyes

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரின் Bury பகுதியை சேர்ந்த ஜேமி-க்கு இந்த விபத்தில் அவரது மார்பின் இரண்டு பக்கமும் பலத்த எலும்பு முறிவுகள் மற்றும் நுரையீரல் துளைகள் ஆகிய முக்கிய பாதிப்புகள் ஏற்பட்டன. விபத்தை அடுத்து Alicante நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜேமிக்கு 2 அவசர சிகிச்சைகள் செய்யப்பட்டு மயக்க நிலையில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், சமீபத்திய சில நாட்களாக ஜேமிக்கு வழங்கப்பட்டு வந்த மயக்க மருந்தின் அளவை மருத்துவர்கள் குறைத்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேமி தன்னுடைய கண்களை திறந்து, குடும்பத்தினரின் குரல்களை அடையாளம் கண்டு கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய சிறுவன் ஜேமி தன்னுடைய 36 வயது தாயார் ஜெம்மா மற்றும் அவரது நண்பர்களுடன் இந்த சுற்றுலாவுக்கு சென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US