லண்டனில் கால்பந்து மைதானத்தில் சிறுவன் குத்திக் கொலை! விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் நடந்த பயங்கரம்
லண்டனில் கால்பந்து விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில், பதின்ம வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சமத்துவம் தென்மேற்கு லண்டன் பகுதியில் Twickenham-ல் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானத்தில் நடந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை 4.45 மணியளவில் Craneford Way-ல் உள்ள மைதானத்திலிருந்து பொலிஸாருக்கு அழைப்பு வந்தது. சம்பவ இடத்துக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை வந்தபோது, 18 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக்கொண்டிருந்தான்.
பாதிக்கப்பட்ட சிறுவன் சிறிது நேரத்தில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 5.54 மணிக்கு அவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
சிறுவனைப் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிடாத நிலையில், அவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க துப்பறிவாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சம்பவ இடம் தடயவியல் அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக சீல் வைக்கப்பட்டுள்ளது.
கத்தியால் குத்திய சந்தேக நபரை பொலிஸார் தேடிவரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள் அதனை தங்கள் போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுவைத்தால், அந்த ஆதாரங்களை முடிந்தால் விசாரணைக்கு உதவியாக தருமாறு கேட்டுக்கொண்ட பொலிஸார், மேலும் அந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

