எங்கள் மகன் உயிருடன் இருக்கிறானா என்றாவது சொல்லுங்கள்: பிரான்சில் மகனை இழந்து தவிக்கும் பெற்றோர் கதறல்...
பிரெஞ்சு கிராமம் ஒன்றில், சுற்றுலா செல்வதற்காக ஒரு குடும்பம் தயாராகிக்கொண்டிருந்தது. பொருட்களை எல்லாம் வாகனத்தில் ஏற்றிவிட்டு அனைவரும் புறப்படத் தயாராகும்போதுதான் தங்கள் இரண்டு வயதுக் குழந்தையைக் காணவில்லை என்பதைக் கண்டுபிடித்தார்கள், குழந்தை எமிலின் பெற்றோர்.
மாயமான குழந்தை
இது நடந்தது, பிரான்சிலுள்ள Le Haut-Vernet என்னும் கிராமத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் திகதி, மாலை 5.00 மணிக்கு.
வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் காணாமல் பெற்றோர் பதற, உடனடியாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டது.
Pic: Gendarmerie Nationale
பிரான்சில் மகனை இழந்து தவிக்கும் பெற்றோர்
எமில் காணாமல் போய் ஆறு மாதங்களாகிவிட்டன. இதுவரை அவனைக் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போனவர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பொலிசார், இப்போது, DNA சோதனை, சாட்சியங்கள், தொலைபேசி உரையாடல்கள் முதானவை மூலம் குழந்தையைத் தேடும் நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளார்கள்.
இதற்கிடையில், தங்கள் குழந்தை உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பது கூடத் தெரியாமல் தாங்கள் தவித்து வருவதாக எமிலுடைய பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள்.
எங்கள் பிள்ளை உயிருடன் இருந்தால், தயவு செய்து அவனை எங்களை விட்டு பிரித்து தனியாக வாழவிடவேண்டாம், அவனை எங்களிடம் அனுப்பி விடுங்கள், அவன் உயிருடன் இல்லையென்றால், அவனை எங்கே புதைத்திருக்கிறீர்கள் என்றாவது சொல்லுங்கள், கல்லறை கூட இல்லாமல் அவனுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் நிலையை எங்களுக்குக் கொடுக்கவேண்டாம் என கண்ணீர் வடிக்கிறார்கள் எமிலுடைய பெற்றோர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |