இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து 6 வயது மகனை உப்பு சாப்பிட வைத்து கொன்ற கொடூர தந்தை! விசாரணையில் தெரியவந்த பகீர் தகவல்கள்
பிரித்தானியாவில் 6 வயது மகனை தனது இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து தந்தையே கொலை செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த ஆண்டு ஜூன் 16- திகதி சோலிஹுல்லின் ஷெர்லியில் உள்ள ஒரு வீட்டில் ஆர்தர் லாபின்ஜோ-ஹியூஸ் (Arthur Labinjo-Hughes)6 வயது சிறுவன் பேச்சு மூச்சின்றி கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.
அவரச உதவியின்முலம் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில், அடுத்த நாள் பர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையில் ஆர்தர் இறந்தார். பிரேதப் பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது.
ஆர்தர் மரணம் தொடர்பாக அவனது தந்தை தாமஸ் ஹியூஸ் (Thomas Hughes,29) மற்றும் எம்மா டஸ்டின் (Emma Tustin, 32) பின்னர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டனர்.
இருவரும் ஆர்தரை தினமும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அவனை பராமரிக்காமல், நீண்ட காலமாக தனிமைப்படுத்தியுள்ளனர், வலுக்கட்டாயமாக பல மணிநேரங்களுக்கு நிற்கவைப்பது, உணவு மற்றும் குடிநீர் என அடிப்படைத் தேவைகளை கூட தராமல் துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும், சிறுவனை அவனது மாமன், தாத்தா அப்பட்டி என யாரிடம் அணுகமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஆர்தரை உடல் ரீதியாகவும் வாய்மொழியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வாசல் கதவின் படியில் நிற்கவைக்கப்பட்டுள்ளார்.
ஆர்தர் மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட அன்று (ஜூன் 16) காலை 11.45 மணி முதல் மதியம் 1.45 மணி வரை குறைந்தது 34 கிராம் உப்பை உட்கொண்டுள்ளார், இது ஆறரை தேக்கரண்டிக்கு சமம்.
[ZAOIFP[
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ஈறுகளில் இரத்தம் வடிந்துள்ளது, பற்களும் சிதைந்த நிலையில் காணப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் இருவரும் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
டஸ்டின் சிறுவனை தாக்கியதாக ஒப்புக்கொண்டார், ஆனால் அதே குற்றத்தின் மேலதிக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஹியூஸ் தாக்குதல் குற்றங்களையும் மறுக்கிறார்.
