இங்கிலாந்தில் கடலிலிருந்து மீட்கப்பட்ட இளைஞரும் சிறுமியும் மரணம்: நீடிக்கும் மர்மம்
இங்கிலாந்திலுள்ள கடற்கரை ஒன்றிலிருந்து 12 வயது சிறுமி ஒருத்தியும், 17 வயது இளைஞர் ஒருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு, பின்னர் உயிரிழந்த விடயம், தற்போது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
திடீரென நிகழ்ந்த ஒரு பயங்கரம்
இங்கிலாந்திலுள்ள Bournemouth கடற்கரையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, 10 பேருக்கு மருத்துவ உதவிக்குழுவினர் சிகிச்சையளிக்கும் ஒரு நிலை ஏற்பட்டது.
Image: PA
ஹெலிகொப்டர்கள், ஒரு 12 வயது சிறுமியையும், ஒரு 17 வயது இளைஞரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, மற்ற எட்டு பேருக்கு கடற்கரையிலேயே சிகிச்சையளிக்கப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, அந்த சிறுமியும், இளைஞரும் உயிரிழந்துவிட்டார்கள்.
Image: Max Willcock/BNPS
நீடிக்கும் மர்மம்
என்ன நடந்தது, எதனால் அந்த 10 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது என்பதைக் குறித்த எந்த தகவலையும் பொலிசார் வெளியிடவில்லை.
சொல்லப்போனால், அந்த இரண்டு உயிர்களின் இழப்புக்குக் காரணமாக இருந்ததாக, சம்பவ இடத்திலிருந்த 40 வயதுகளிலிருந்த ஒரு ஆண் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் விடுவிக்கப்பட்டுவிட்டார்.
Image: Max Willcock/BNPS
அத்துடன், படகு ஒன்று கடலில் நீந்திக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதாக முதலில் கூறப்பட்ட நிலையில், பொலிஸ் விசாரணையில், அந்த படகு யார் மீதும் மோதவில்லை என்றும், அந்த பிள்ளைகள் இருவர் மரணத்துக்கும் அந்த படகுக்கும் சம்பந்தம் இல்லை என தற்போது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
Image: DorsetLive/BPM
ஆகவே, Bournemouth கடற்கரையில் நிகழ்ந்த மரணங்கள் மற்றும் காயங்களுக்கு என்ன காரணம் என்பது மர்மமாகவே நீடிக்கிறது.