இளவரசர் வில்லியமிடமே இளவரசரை சந்திக்க முடியுமா என கேட்ட சிறுவன்: ஒரு சுவாரஸ்ய சம்பவம்
சிறுவன் ஒருவன், இளவரசர் வில்லியமை அடையாளம் தெரியாமல் அவரிடமே, இளவரசர் வில்லியமை பார்க்கமுடியுமா என கேட்ட சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
குழந்தைகளை நேசிக்கும் இளவரசர் தம்பதி
இளவரசி கேட்டுக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். ஆனால், மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான தனக்கும் பிள்ளைகளைப் பிடிக்கும் என இளவரசர் வில்லியம் நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில், பொதுமக்களை சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியின்போது மூன்று வயது சிறுவன் ஒருவன், இளவரசர் வில்லியமை அடையாளம் தெரியாமல், அவரிடமே, இளவரசர் வில்லியமைக் காண இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறான்.
@the.royal.watcher Sweet moment captured and reposted with permission from @cinderella2678 and @bmxaubrey #fyp #princewilliam #princewilliamofwales #katemiddleton #royalfamily #kingcharles #scottishcoronation #princeharry #princessdiana #royalnews #funnyvideo #britishhumour #royalnews #kidsoftiktok #sweetmoments ♬ original sound - The Royal Watcher
அவனுக்கு தன்னை அடையாளம் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்ட வில்லியம், அவனது தாயிடம் ரகசியமாக ‘சொல்லாதீர்கள்’ என கண்ணைக் காட்டிவிட்டு, அந்த சிறுவனிடம், இளவரசர் வில்லியம் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லையே, நீ அவரைப் பார்த்ததில்லையா என்று கேட்டுள்ளார்.
அந்த சிறுவன், இல்லையே என்று கூற, நான் யார் தெரியுமா என்று கேட்டிருக்கிறார் வில்லியம். அதற்கு அந்த சிறுவன், நீங்கள்தான் அரசாங்கம் என்று நினைக்கிறேன் என்று கூற, விடாத வில்லியம், நான் அரசாங்கம் போலிருக்கிறேனா என்று அந்த சிறுவனிடம் கேட்டுள்ளார். அந்த சிறுவனும், அரசாங்கத்தார் இப்படித்தான் ஆடை அணிவார்கள் என்று கூறியிருக்கிறான்.
சஸ்பென்சை உடைத்த வில்லியம்
பின்னர் மெதுவாக, அந்தச் சிறுவனிடம், என் பெயரும் வில்லியம்தான் என்று கூறியிருக்கிறார் இளவரசர். அப்போதுதான், தான் இளவரசர் வில்லியமிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது அந்தச் சிறுவனுக்குப் புரியவர, ஓ, நீங்கள்தானே இளவரசர் வில்லியம்? அம்மா, இளவரசர் வில்லியம் இங்கே இருக்கிறார் என ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் துள்ளிக் குதித்திருக்கிறான் அந்தச் சிறுவன்.
இந்த வீடியோவை அந்த சிறுவனின் பாட்டி தற்போது சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டிருக்கிறார். வீடியோவைக் கண்ட பிரித்தானியர்கள், இளவரசி கேட்டைப்போலவே இளவரசர் வில்லியமும் குழந்தைகளை நேசிப்பதை அந்த வீடியோ வெளிக்காட்டுவதாகக் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
இன்னொரு பக்கம், அந்த நிகழ்ச்சியின்போதும் இளவரசி கேட்டைக் கண்ட சந்தோஷத்தில் குட்டிக் குழந்தை ஒருத்தி உணர்ச்சிவசப்பட்டு அழத் துவங்க, கேட் அந்தக் குழந்தையை கட்டி அணைத்துக்கொள்ளும் காட்சி ஒன்றும் வெளியாக, இளவரசர் தம்பதியர் குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பைக் கண்டு புளகாங்கிதம் அடைந்துள்ளார்கள் பிரித்தானியர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |