இயற்கை உபாதைக்காக சென்று திரும்பிய போது வலியால் துடித்த சிறுவன்! அங்கு கொடிய விஷப்பாம்பை கண்டு அதிர்ந்த பெற்றோர்
தமிழகத்தில் பாம்பு கடித்ததில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
திருக்கோவிலூரை அடுத்த ரிஷிவந்தியம் பகுதியைச் சோ்ந்த வளையாபதி மகன் மகாவிஷ்ணு (15). இவா், அதே ஊரில் உள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
மகாவிஷ்ணு சனிக்கிழமை மாலை அவரது வீட்டின் அருகே இயற்கை உபாதைக்காக சென்றபோது, அவர் உடலில் பாம்பு கடித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து வலியால் சிறுவன் துடித்தான்.
இதையடுத்து தனது பெற்றோரிடம் சென்ற மகாவிஷ்ணு தன்னை பாம்பு கடித்ததாக கூறியதோடு உடல் முழுவதும் வலிப்பதாக கூறினான், இந்த வார்த்தைகளை கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்ததோடு அங்கு பாம்பு செல்வதை கண்டு பதறினர்.
பின்னர், உறவினா்கள் மகாவிஷ்ணுவை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், மகாவிஷ்ணு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இது குறித்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.