கோர விபத்தில் சிக்கிய பிரித்தானிய சிறுவன்... கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்த குடும்பத்தினர்
கிழக்கு லங்காஷயர் பகுதியில் கோர விபத்தில் சிக்கி மரணமடைந்த சிறுவனின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக அளித்துள்ளனர்.
சூப்பர் ஹீரோ ஆசை
இறந்தும் உயிருடன் இருக்கவேண்டும் என்ற சிறுவனின் சூப்பர் ஹீரோ ஆசையை குடும்பத்தினர் தற்போது நிறைவேற்றியுள்ளனர். 14வது பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் 13 வயதான சிறுவன் ஹரி கின்னி-ரியான் புதன்கிழமை கோர விபத்தில் சிக்கி கொல்லப்பட்டான்.
Image: Liverpool Echo
கிழக்கு லங்காஷயர் பகுதியில் சுமார் 7.25 மணிக்கு நடந்த இந்த கோர விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, காயங்கள் காரணமாக மரணமடைந்தான்.
துக்கத்தில் இருந்து மீள முடியவில்லை
குறித்த தகவலை சிறுவனின் தாயார் லிஸ் ரொயான் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்திருந்தார். மேலும், துக்கத்தில் இருந்து மீள முடியவில்லை என்றாலும், தாம் பெருமைப்படுவதாகவும், தமது மகனின் ஆசையை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Image: Liverpool Echo
ஹரியின் உடல் உறுப்புகளை அவர் விரும்பியது போலவே தானம் செய்துள்ளதாக லிஸ் ரியான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விபத்துக்கு காரணமானவர் என கூறப்படும் 34 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.