லண்டனில் தந்தையின் கண் முன்னே சிறுவனுக்கு நேர்ந்த துயரம்... மொத்தமாக நொறுங்கிய குடும்பம்
லண்டனில் 8 வயதேயான சிறுவன் தமது தந்தையுடன் சாலையை கடக்க முயன்ற நிலையில், அசுர வேகத்தில் வந்த ஒரு சாரதியால் விபத்தில் சிக்கி, சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளது மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
இந்த கோர சம்பவம்
கிழக்கு லண்டனில் Plumstead பகுதியிலேயே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. 8 வயதேயான Mustafa Ahmed தமது தந்தை மற்றும் சகோதரருடன் சாலையைக் கடக்க காத்திருந்துள்ளார்.
Credit: The Daily Mirror
இந்த வேளையிலேயே உரிமம் பெறாத மற்றும் காப்பீடு செய்யப்படாத நிக்கோலஸ் ஹாப்கின்ஸ் என்ற 20 வயது இளைஞரின் மோட்டார் பைக் சிறுவன் முஸ்தபா அகமது உள்ளிட்ட மூவர் மீது மோதியுள்ளது.
ஏற்கனவே தனது காதலியை கொடூரமாக தாக்கி, கழுத்தை நெரித்துள்ளதுடன் கத்தரிக்கோலால் மிரட்டல் விடுத்த வழக்கில் நிக்கோலஸ் ஹாப்கின்ஸ் பிணையில் வெளிவந்திருந்ததாக கூறப்பட்டது.
தற்போது சிறுவன் முஸ்தபா கொல்லப்பட்ட வழக்கில் நிக்கோலஸ் ஹாப்கின்ஸுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லண்டன் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2023 பிப்ரவரி 19ம் திகதி மதியத்திற்கு மேல் இந்த கோர விபத்து நடந்துள்ளது. சம்பவத்தின் போது மாலை நேர தொழுகைக்காக முஸ்தபா தனது தந்தை Mohamed Mao மற்றும் 11 வயது சகோதரர் Ahmed Ahmed ஆகியோருடன் குடியிருப்பில் இருந்து நடந்து சென்றுள்ளனர்.

புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு... தாயார், இரு பிள்ளைகள் மீது அமில வீச்சு: லண்டனை உலுக்கிய சம்பவத்தின் பின்னணி
அப்போது சாலையை கடக்க காத்திருந்த நிலையில் அந்த விபத்து நடந்துள்ளது. இதில் மூவரும் காயமடைந்துள்ளதுடன், நீண்ட நாட்கள் மருத்துவமனை சிகிச்சையும் தேவைப்பட்டுள்ளது.
ஆனால் முஸ்தபா மட்டும் சம்பவயிடத்திலேயே உள்ளூர் நேரப்படி 7.30 மணியளவில் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது 30mph அனுமதிக்கப்பட்டுள்ள சாலையில் சிவப்பு விளக்கு எரிவதையும் கண்டுகொள்ளாமல் 58mph வேகத்தில் நிக்கோலஸ் ஹாப்கின்ஸ் தனது மோட்டார் பைக்கில் பாய்ந்துள்ளதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
Credit: The Daily Mirror
மருத்துவ ரீதியான கோமா
மோதப்பட்ட வேகத்தில் மூவரும் அந்தரத்தில் பறந்து சாலையில் விழுந்துள்ளனர். முஸ்தபா நின்று கொண்டிருந்த காரின் அடியில் சிக்கியதுடன் உடனடியாக மயக்கமடைந்ததாகவும் கூறப்பட்டது.
விபத்தை அடுத்து 49 வயதான முகமது மருத்துவ ரீதியான கோமாவில் வைக்கப்பட்டார், மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது, தலையில் பலத்த காயம் மற்றும் இடுப்பெலும்பு உடைந்திருந்தது.
முஸ்தபாவின் சகோதரருக்கும் கல்லீரல் சிதைவு உட்பட பல காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்தில் ஹாப்கின்ஸும் காயம்பட்டிருந்தான். மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர், நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டதில், கடந்த நவம்பர் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான்.
Credit: Metropolitan Police
மட்டுமின்றி, அதே நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னதாக ஹாப்கின்ஸ் சிறையில் அடைக்கப்பட்டான். தற்போது 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 10 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தகுதியிழப்பும் செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |