இன்ஸ்டாகிராமில் அனுப்பிய ஐ லவ் யூ மெசேஜால் பணத்தை தொலைத்த 15 வயது சிறுவன்
இன்ஸ்டாகிராமில் அனுப்பிய ஒற்றை செய்தியால் 15 வயது சிறுவன் ஒருவன் பணத்தை இழந்துள்ளார்.
பணம் இழப்பு
சமீப காலமாகவே டிஜிட்டல் மோசடி அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்காக சமூக ஆர்வலர்களும் அரசாங்கமும் பல்வேறு முன்னெச்சரிக்கை விடயங்களை கூறி கொண்டே இருக்கின்றனர்.
அதையும் மீறி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பணத்தை இழக்கின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களில் மோசடி நீடித்துக் கொண்டே இருக்கிறது.
அந்தவகையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் வீடியோக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதையடுத்து அந்த பெண் இன்ஸ்டாகிராமில் ஐ லவ் யூ என அனுப்பிய செய்திக்கு ஐ லவ் யூ என பதில் செய்தி அனுப்பினார் அந்த சிறுவன்.
பின்னர், அடையாளம் தெரியாத நபரின் எண்ணில் இருந்து சிறுவனுக்கு வந்த அழைப்பில், இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்ணிற்கு எப்படி அவ்வாறான செய்தி அனுப்புவீர்கள் என கேட்டனர்.
மேலும், அந்த பெண்ணின் கணவர் போன் செய்ததாக கூறியது மட்டுமல்லாமல், அவர்கள் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் சிறுவனை மிரட்டியுள்ளனர்.
மோசடி நபர்களின் செயலால் செய்வதறியாது இருந்த சிறுவன் பயத்தின் காரணமாக ஓன்லைன் மூலம் ரூ.11000 பணத்தை இழந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |