லண்டனில் 17 வயது சிறுவன் குத்தி கொலை! ஏற்கனவே மூன்று பெண்கள் சிக்கிய நிலையில் அடுத்ததாக 19 வயது பெண் கைது
லண்டனில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 19 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டனின் Streatham பகுதியில் கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி Denardo Samuels-Brooks என்ற 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக 15,16,17,18,19 வயதுகளில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் Denardo கொலை தொடர்பில் எட்டாவது நபராக 19 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
கைதுக்கு பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்ட அப்பெண் செப்டம்பர் தொடக்கத்தில் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Denardo குத்தி கொல்லப்பட்டது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது டுவிட்டர் சமூகவலைதளம் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.