இளவரசர் வில்லியமுடன் கைகுலுக்கிய சிறுவன் எடுத்துள்ள வேடிக்கை முடிவு: ஒரு சுவாரஸ்ய செய்தி
பிரித்தானிய மக்களுக்கு எப்போதுமே இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.
பெரியவர்கள் மட்டுமல்ல, சிறுபிள்ளைகளும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதுபோல் ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.
சமீபத்தில் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும், வட அயர்லாந்துக்குச் சென்றிருந்தபோது பொதுமக்களை சந்தித்தார்கள்.
அப்போது இளவரசர் வில்லியம் சிறு பிள்ளைகள் பலருடன் கைகுலுக்கினார். தன்னுடன் இளவரசர் வில்லியம் கைகுலுக்கியதால் அளவற்ற மகிழ்ச்சியடைந்த ஒரு சிறுவன், இளவரசர் தொட்ட தனது கையை இனி கழுவவே போவதில்லை என உற்சாகக் குரல் எழுப்பினான்.
ட்விட்டரில் வெளியாகியுள்ள காட்சி ஒன்றில், அந்த சிறுவன், ’நான் இந்தக் கையைக் கழுவவே போவதில்லை’ என உற்சாகக் குரல் எழுப்புவதையும், உடனே மற்றொரு சிறுவன், யாருமே கை கழுவப்போவதில்லை என சத்தமிடுவதையும் காணலாம்...
A young fan in Carrickfergus was SO excited to meet the Prince of Wales that he made THIS vow! ?? pic.twitter.com/Txzc5btBks
— The Royal Family Channel (@RoyalFamilyITNP) October 11, 2022