முன்பின் தெரியாத நபருக்காக முதன்முறை பிரித்தானியாவுக்கு பறந்த கனேடிய இளம்பெண்: ஒரு எச்சரிக்கை செய்தி
முன்பின் தெரியாத ஒருவருடன் இணையத்தில் ஏற்பட்ட உறவை காதல் என்று நம்பி பிரித்தானியாவுக்குப் பறந்த கனேடிய இளம்பெண், காதலர் என நம்பிய நபராலேயே கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்.
கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Ashley Wadsworth (19), இணையம் வாயிலாக தான் சந்தித்த Jack Sepple (23) என்னும் நபரை சந்திப்பதற்காக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி, பிரித்தானியா சென்றுள்ளார்.
அவர் இன்று மீண்டும் கனடா திரும்புவதாக இருந்தது.
ஆனால், நேற்று முன்தினம், அதாவது செவ்வாயன்று மாலை 4.00 மணியளவில் Chelmsfordஇல் அமைந்துள்ள எசெக்சிலுள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அங்கு அவர்கள் மருத்துவ உதவிக் குழுவினருடன் விரைந்தபோது, Ashley கத்திக்குத்துக் காயங்களுடன் இரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.
மருத்துவ உதவிக்குழுவினர் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக 23 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
தற்போது, Ashleyயின் காதலரான Jackதான் கொலையாளி என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
19 வயதே ஆகும் நிலையில், காதல் என்ற பெயரில் ஏதோ கண்ணை மறைக்க, வாழவேண்டிய வயதில் பரிதாபமாக பலியாகியுள்ளார் Ashley. இத்தனைக்கும், இதுவரை Ashley கனடாவை விட்டு வேறெங்கும் சென்றது கிடையாதாம்.
ஒன்லைன் காதல் என்ற பெயரில் முன்பின் தெரியாதவர்களை நம்பி காதல் வலையில் சிக்கும் இளம்பெண்களுக்கு Ashleyயின் வாழ்க்கை ஒரு பாடம்.