காதலித்து கர்ப்பமாக்கிய பெண் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் காதலன் எடுத்த பயங்கர முடிவு
இந்தியாவின் ஹரியானாவில், தான் காதலித்து கர்ப்பமாக்கிய பெண் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால், தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரைக் கொன்று புதைத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
இளம்பெண்ணைக் காதலித்து கர்ப்பமாக்கிய நபர்
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், செவ்வாய்க்கிழமையன்று, 19 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக அவரது சகோதரர் பொலிசில் புகாரளித்துள்ளார்.
தன் சகோதரியின் நண்பர்களில் ஒருவருக்கும், தன் சகோதரி காணாமல் போனதற்கும் தொடர்பிருக்கலாம் என அவர் தெரிவித்ததைத் தொடர்ந்து, சஞ்சு மற்றும் பங்கஜ் என்னும் இருவரை பொலிசார் பிடித்து விசாரிக்க, அவர்கள் தாங்கள்தான் அந்த பெண்ணைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
நடந்தது என்ன?
அந்தப் பெண்ணும் சஞ்சுவும் காதலித்து வந்துள்ளார்கள். இதற்கிடையில் அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார்.
தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சஞ்சுவை வற்புறுத்தியுள்ளார் அந்தப் பெண். சஞ்சுவோ, தனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் இது தொடர்பாக அந்தப் பெண் தன் காதலனுடன் சண்டையிட்டிருக்கிறார்.
ஆகவே, ஒரு நீண்ட ட்ரைவ் போகலாம் என கூறி அந்தப் பெண்ணை தன் நண்பர்களான பங்கஜ் மற்றும் ரித்திக்குடன் ஒரு காரில் ஏற்றிச் சென்றுள்ளார் சஞ்சு.
ஆளரவமற்ற ஒரு இடத்தில் கொண்டு காரை நிறுத்திவிட்டு, அந்தப் பெண்ணைக் கொன்று புதைத்துள்ளார்கள் மூவரும்.
தற்போது சஞ்சுவும் பங்கஜும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ரித்திக்கை பொலிசார் தேடிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |