வாக்குவாதத்தின்போது காதலியை நெற்றியில் சுட்ட காதலன்! தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர், காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியால் சுட்ட காதலன்
உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் தலிப் என்ற இளைஞர், தனது காதலி தைபாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தலிப், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் காதலியின் நெற்றியில் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தைபா உயிரிழந்துள்ளார்.
பின்னர் தலிப்பும் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இருவரது உடல்களையும் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட இளைஞரால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், உயிரிழந்த காதலர்களின் செல்போன்கள் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
Representation image
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |