கணவனுக்குத் தெரியாமல் காதலனை பார்க்க சென்ற டயானா... சார்லஸ் மட்டும் சளைத்தவரா: ஆனால் சிக்கல் யாருக்கு தெரியுமா?
இளவரசி டயானாவுக்குத் தெரியாமல் சார்லசும், சார்லசுக்குத் தெரியாமல் டயானாவும் திருமணத்துக்கு வெளியே வைத்திருந்த உறவுகள் இன்று உலகம் அறிந்ததே.
ஆனால், அவர்கள் ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டிருந்தபோது, அதனால் கடும் அழுத்தமான சூழ்நிலைக்குள்ளான சிலர் இருக்கிறார்கள். அது தம்பதியரின் பிள்ளைகள் அல்ல, அவர்களது பாதுகாவலர்கள்!
சார்லஸ் தன் காதலியான கமீலாவை சந்திக்கச் செல்லும்போது எப்போதும் சார்லசுடன் Colin Trimming என்ற பாதுகாவலர் இருப்பாராம்.
டயானா தன் காதலரான James Hewittஐ அவரது வீட்டுக்குச் சென்று சந்திக்கும்போது டயானாவின் பாதுகாவலர் தரைதளத்தில் சோபாவில் படுத்துத் தூங்க, டயானாவும் அவரது காதலரும் மாடியில் இருப்பார்களாம்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், கமீலாவின் வீட்டுக்கு எதிரேதான் டயானாவின் காதலரான James Hewittஇன் வீடு இருந்திருக்கிறது. கமீலா வீட்டில் என்ன வேலை செய்தாலும் நிர்வாணமாகவேதான் இருப்பாராம். ஒரு நாள் தற்செயலாக James Hewitt கமீலா வீட்டைத் திரும்பிப் பார்க்க, அங்கே கமீலா நிர்வாணமாக நிற்பதைக் கண்டாராம். இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கமீலாவின் கணவர் Andrew Parker Bowlesதான் James Hewittஇன் இராணுவ உயர் அதிகாரி.
இப்படியே கணவனுக்குத் தெரியாமல் டயானாவும், மனைவிக்குத் தெரியாமல் சார்லசும் தங்கள் உறவுகளைத் தொடர்ந்த நிலையில், அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் தங்கள் தலைதான் உருளும் என எப்போதும் பதற்றத்திலேயே இருந்திருக்கிறார்கள் அவர்களது பாதுகாவலர்கள்.
அடுத்த வேடிக்கை என்னவென்றால், இவர்களது தொடர்புகளை எப்படியாவது வெளியே கொண்டுவர ஊடகங்கள் முயற்சித்துள்ளன. அதற்காக அவை அரண்மனை ஊழியர்கள் என்ற போர்வையில் ஆட்களை நியமித்திருக்கின்றன.
ஒரு முறை, அரண்மனையின் ஊடகச் செயலரான Michael Shea என்பவர், தான் ஊடகங்களுக்கு தகவல் கொடுக்கும் கருப்பு ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன் என்றாராம். The Sun பத்திரிகையோ வேடிக்கையாக, அதற்கு வாய்ப்பே இல்லை என்றதாம். காரணம், அந்த பத்திரிகையின் சார்பில் 11 பேர் அரண்மனைக்குள் நியமிக்கப்பட்டார்கள் என்று அந்த பத்திரிகை கூற, வெட்கத்தில் தலைகுனிந்திருக்கிறார் Michael!