வங்காளதேசத்தை சுழலில் மிரட்டிய வீரர்! சாம்பியன் டிராஃபியில் அபார பந்துவீச்சு
சாம்பியன் டிராஃபியில் நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல், வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
ராவல்பிண்டில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான சாம்பியன் டிராஃபி போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்ய, வங்காளதேச அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
டன்சித் ஹசன் 24 (24) ஓட்டங்கள் எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் (Michael Bracewell) பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மெஹிதி ஹசன் மிராஸ் 13 ஓட்டங்களிலும் வெளியேற, பிரேஸ்வெல் தனது மிரட்டலான பந்துவீச்சை ஹிரிடோய் (7) விக்கெட்டையும் கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய ரஹிம் 2 ஓட்டங்களிலும், மஹ்முதுல்லா 4 ஓட்டங்களிலும் பிரேஸ்வெல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.
எனினும் பொறுப்புடன் ஆடிய அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 77 (110) ஓட்டங்கள் குவித்தார்.
10 ஓவர்களை வீசிய மைக்கேல் பிரேஸ்வெல், 26 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். மேலும் அவரது ஸ்பெல்லில் 43 பந்துகள் dots என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |