நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மைக்கேல் பிராஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார்
விரைவில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பிளாக் கேப்ஸ் அணியை கிவிஸ் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிராஸ்வெல் (Michael Bracewell) வழிநடத்துவார்.
வலது குதிகால் காயம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விளையாடாமல் இருந்த பிராஸ்வெல், உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தேசிய அணிக்குத் திரும்பினார்.
கேன் வில்லியம்சன், மிட்செல் சான்ட்னர் போன்ற கிவிஸ் நட்சத்திர வீரர்கள் அனைவரும் IPL-லில் உள்ளனர்.
டிம் சவுத்தி, வில் யங், காலின் முன்ரோ ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Michael Bracewell, New Zealand Cricket Team New Captain, New Zealand Twenty20 tour of Pakistan