இங்கிலாந்தில் இவ்ளோ மோசமா ஆடுறாரு.. ரிஷப் பண்டை இந்திய அணியில் இருந்து தூக்கிட்டு இவரை போடுங்க... பிரபல விரர் ஆதங்கம்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட ரிஷப் பண்டிற்கு பதிலாக வேறு வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள அவர் வெறும் 87 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக அனுபவ வீரரான விருத்திமான் சஹா இடம்பெறவேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.
இது குறித்து பேசிய அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக், இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் இந்த தொடரில் அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இதன் காரணமாக இந்திய அணி ஒரு சவாலான காரியத்தை கையில் எடுத்தாக வேண்டும்.
அதன்படி துவக்க வீரரான ராகுல் கீப்பராகவும் செயல்பட வேண்டும். இந்த இரண்டிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இப்படி ராகுலை கீப்பராக தேர்வு செய்தால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை அணியில் விளையாட வைக்க முடியும். அப்படி ராகுல் கீப்பராக செயல்படும் பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் ஒரு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேனாக அணியில் இணையலாம் என கூறியுள்ளார்.