5,288 கோடி வசூலித்துள்ள திரைப்படம்! இன்னும் நிற்கவில்லை
ஹாலிவுட்டில் வெளியான F1 என்ற கார் பந்தய திரைப்படம், உலகளவில் இதுவரை 603 மில்லியன் டொலர்கள் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
F1
பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் (Brad Pitt) நடிப்பில் ஜூன் 27ஆம் திகதி, கார் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான திரைப்படம் "F1".
Tron, Oblivion, Top Gun: Maverick படங்களைக் கொடுத்த ஜோசப் கோஸின்ஸ்கி (Joseph Kosinski) இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்ற F1 திரைப்படம், உலகம் முழுவதிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.
ரூ.100 கோடிக்கும் மேல் இந்தியாவில்
இதுவரை F1 திரைப்படம் 603 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,288 கோடி) வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் F1 ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இரண்டைரை மணிநேரம் ஓடக்கூடிய இந்த திரைப்படத்திற்கு மிஷன் இம்பாஸிபிள், பேட் மேன், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஆகிய படங்களுக்கு பணியாற்றிய ஹன்ஸ் ஸிம்மர் இசையமைத்துள்ளார்.
பார்வையாளர்கள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள F1 திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பிராட் பிட்டின் கேரியரில் இந்த F1 திரைப்படம் அதிக வசூலித்த படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |