திருப்பதியில் செப்18 பிரம்மோற்சவம்.. கோலாகல கொண்டாட்டம்!
திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி பிரம்மோற்சவம் செப்.18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரசுவாமி கோவிலும் ஒன்று.
இந்த கோவிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பிரம்மோற்சவ விழா
இந்த கோயிலில் மார்கழி மற்றும் புரட்டாசி மாதங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழா மிகவும் பிரசித்தம்.
திருமாலை தரிசிக்க வந்த பிரம்ம தேவர், பெருமாளுக்கு விழா எடுத்தார். இதுவே புகழ்பெற்ற பிரம்மோற்சவ விழாவாக தற்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
புரட்டாசி மாதமான செப்.18-ம் தேதி பிரம்மோற்சவம் தொடங்கி 26-ம் தேதி நிறைவடைகிறது.
ஒவ்வொரு நாளும் மலையப்ப சுவாமி, ஒவ்வொரு வாகனத்தில் காலையிலும் மாலையிலும் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வருகின்ற செப்.18-ம் தேதி மாலையில் தெய்வானைக்கு முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்பிப்பார் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பூமனா கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,"செப்.22-ல் கருடசேவை, செப். 23-ல் ஸ்வர்ண ரதம், செப்.25-ல் ரதோத்ஸவம், செப்.26ல் சக்ரஸ்நானம், துவஜாரோஹணம் நடக்கிறது.
இந்த கொண்டாட்டங்களின் போது கூட்ட நெரிசலை எதிர்கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்படும். பரிந்துரை கடிதங்கள் எதுவும் பெறப்பட மாட்டாது" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |