மூளையை சேதப்படுத்தும் அமீபாவால் 2 வயது சிறுவன் பலி: அறிகுறிகள் என்னென்ன
மூளையை சேதப்படுத்தும் அமீபா தாக்கியதில் அமெரிக்காவை சேர்ந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிறுவனை தாக்கிய அமீபா
அமெரிக்காவின் நெவாடா பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் உட்ரோ பண்டி, அமீபா-வால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Naegleria fowleri என்ற மூளையை சேதப்படுத்தும் அமீபா தொற்று காரணமாக புதன்கிழமை உயிரிழந்ததாக அவரது தாயார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் உட்ரோ பண்டி கிட்டத்தட்ட 7 நாட்களாக உடல்நல குறைவுடன் போராடி வந்ததாகவும், அவர் தன்னுடைய ஹீரோ, அவனை மிக சிறந்த குழந்தையாக இந்த உலகத்தில் படைத்ததற்காக கடவுளுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் அவரது தாயார் ப்ரியானா பேஸ்புக்-கில் எழுதியுள்ளார்.
இந்த மூளையை சேதப்படுத்தும் அமீபா தொற்றானது சிறுவனுக்கு இயற்கை வெந்நீர் ஊற்றுகளில் இருந்து பரவி இருக்கும் என நம்பப்படுகிறது.
அமீபா தொற்று அறிகுறிகள்
நெக்லேரியா ஃபோலேரி(Naegleria fowleri) என்பது ஒற்றை செல் நுண்ணிய அமீபாவாகும், இவை பொதுவாக மண் மற்றும் சூடான நன்னீர் பகுதிகளில் காணப்படுகிறது என்று நெவாடாவின் பொது மற்றும் நடத்தை ஆரோக்கியத்தின் பிரிவு தெரிவித்துள்ளது.
Pic: iStock
இந்த அமீபாவானது பாதிக்கப்பட்டவரின் மூக்கு வழியாக மூளைக்கு சென்று, மூளையில் பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன் மூளை திசுக்களை அழிக்க தொடங்கியது.
அமீபா தொற்றின் அறிகுறியானது முதலில், தீவிரமான தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி என தொடங்கி பின் கோமா நிலைக்கு முன்னேறி பின் மரணத்திற்கு அழைத்து செல்லும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |