அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்..உலகக்கோப்பையில் நங்கூரம் போல் நின்று மிரட்டிய கிங்
பிரண்டன் கிங் 32 போட்டிகளில் 744 ஓட்டங்களுடன் 6 அரைசதம் அடித்துள்ளார்
அயர்லாந்து தரப்பில் டெலனி 3 விக்கெட்டுகளையும், சிமி சிங் மற்றும் மெக்கர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 146 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன.
முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் மேயர்ஸ், லீவிஸ், பூரன் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சார்லஸ் அதிரடியாக 18 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார்.
எனினும் அதிரடி வீரர் ரோவ்மன் போவெல் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால், மறுபுறம் நங்கூரம் போல் நின்று ஆடிய பிரண்டன் கிங் மிரட்டலாக அரைசதம் அடித்தார். இது அவருக்கு 6வது டி20 அரைசதம் ஆகும்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய அவர் 48 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. அபாரமாக பந்துவீசிய டெலனி 16 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Brandon King produced a much-needed big score for West Indies ?#IREvWI | ? https://t.co/LNaSAJSEKW
— ICC (@ICC) October 21, 2022
Head to our app and website to follow the #T20WorldCup action ? https://t.co/76r3b7l2N0 pic.twitter.com/y8xsdnxVPk