மசாலா வர்த்தகத்தில் தொடங்கி... ரூ 9,000 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதித்த நபர்
ஹர்ஷ் மரிவாலா தனது குடும்பத்தின் மசாலா மற்றும் சமையல் எண்ணெய் வர்த்தக வணிகத்தை மரிகோ எனும் ஒரு மாபெரும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனமாக வெற்றிகரமாக மாற்றி சாதித்துள்ளார்.
மூன்று சகோதரர்களுடன்
கடந்த 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி நிறுவனத்தின் சந்தை மதிப்பு தோராயமாக ரூ. 9,650 கோடி என்றே கூறப்படுகிறது. 1862ல் அவரது தாத்தா வல்லபதாஸ் வாசஞ்சி, கட்ச்சிலிருந்து மும்பைக்கு வந்து மிளகு வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
1948ல் ஹர்ஷ் மரிவாலாவின் தந்தையான சரண் தாஸ் தனது மூன்று சகோதரர்களுடன் இணைந்து பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவினார்.
அதன் பிறகு ஹர்ஷ் 1971ல் தனது குடும்ப வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார். 1990ல் மரிகோ என்ற நிறுவனத்தை நிறுவினார். அவருடைய தலைமையின் கீழ் தற்போது ஒரு முன்னணி எப்எம்சிஜி நிறுவனமாக மரிகோ செயல்பட்டு வருகிறது.
மரிக்கோ நிறுவனம்
சமையல் எண்ணைகளுக்கு அப்பால் முடி பராமரிப்பு, அழகு சாதன பொருட்கள், சுகாதாரம், உணவுப் பொருட்கள், தோல் பராமரிப்பு தயாரிப்புகளை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளான பாராசூட், சஃபோலா, லிவோன் மற்றும் செட் வெட் ஆகியவை மக்கள் மத்தியில் பிரபலமான பிராண்டுகள் ஆகும்.
FMCG துறையில் ஒரு அழியாத பெயரை மரிக்கோ நிறுவனம் பெற்றுள்ளது. பிப்ரவரி 2025 நிலவரப்படி, மரிகோவின் சந்தை மதிப்பு ரூ.808.72 பில்லியனாக உள்ளது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் 1792-வது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மரிக்கோ தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |