அவுஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் விளாசிய மே.தீவுகள் கேப்டன்! புதிய மைல்கல்
பெர்த் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் பிராத்வெயிட் சதம் விளாசியுள்ளார்.
அவுஸ்திரேலியா ஆதிக்கம்
பெர்த்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 598 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 283 ஓட்டங்களும் முதல் இன்னிங்ஸில் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 182 ஓட்டங்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
இமாலய இலக்கு
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 498 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
Splendid century ?
— ICC (@ICC) December 3, 2022
Watch the #AUSvWI series live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?
? Scorecard: https://t.co/YyderopRZu pic.twitter.com/fhiArvuerH
பிராத்வெயிட் சதம்
தொடக்க வீரரான அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெயிட் சதம் விளாசினார். இது அவருக்கு 11வது டெஸ்ட் சதம் ஆகும். மேலும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் அடித்த முதல் சதம் இதுவாகும்.
அத்துடன் 5000 ஓட்டங்களை கடந்த 13வது மேற்கிந்திய வீரர் என்ற பெருமையையும் பிராத்வெயிட் பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்கு கடைசி நாளில் இன்னும் 306 ஓட்டங்கள் தேவை.
@Action Images