241 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி! கண்ணியமான மகிழ்ச்சி எனக்கூறிய கேப்டன்
நாட்டிங்காம் டெஸ்டில் இங்கிலாந்து அணி 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.
மேற்கிந்திய தீவுகள் படுதோல்வி
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 457 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 425 ஓட்டங்கள் குவித்தது.
ஜோ ரூட் (Joe Root) 122 ஓட்டங்களும், ஹாரி புரூக் (Harry Brook) 109 ஓட்டங்களும் விளாசினர். அதனைத் தொடர்ந்து 385 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.
சோயிப் பஷீர், அட்கின்சன்,வோக்ஸ் ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் மேற்கிந்திய தீவுகள் 143 ஓட்டங்களுக்கு சுருண்டது.
கிரைக் பிராத்வெயிட்
அணித்தலைவர் பிராத்வெயிட் 47 ஓட்டங்களும், ஹோல்டர் 37 ஓட்டங்களும் எடுத்தனர். சோயிப் பஷீர் 5 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் அட்கின்சன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
தோல்வி குறித்து பேசிய அணித்தலைவர் கிரைக் பிராத்வெயிட், ''கண்ணியமான மகிழ்ச்சி, எனினும் பந்துவீச்சு சிறப்பாக இருந்திருக்கலாம். துடுப்பாட்டத்தில், முதல் இன்னிங்சில் நாங்கள் நன்றாக இருந்தோம், ஆனால் இன்று நாங்கள் இலக்கை எட்டவில்லை. ஓட்டங்களை கட்டுப்படுத்த Flat விக்கெட்டில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதை இங்கிலாந்து எங்களுக்கு காட்டியது.
எங்கள் வீரர்கள் கற்றுக்கொள்வார்கள். மனதளவில் கடினமாக இருக்க வேண்டும் மற்றும் எதிர்கால டெஸ்ட் போட்டிகளுக்கு இதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சில முக்கியமான கேட்சுகளை கைவிட்டதை நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த ஆண்டு எங்களுக்கு பல டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன'' என தெரிவித்தார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |