சொந்த தாயாரை மரணத்தில் இருந்து காப்பாற்றிய 6 வயது லண்டன் சிறுமியின் துணிச்சல்
தாயார் கடுமையான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதை அறிந்து, 6 வயது பாடசாலை மாணவி துணிச்சலாக 999 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளதுடன், தாயாரையும் தேற்றியுள்ளார்.
தமது தாயாரின் நிலை
லண்டனின் Hornchurch பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. பாடசாலை சிறுமியான Cali-Maii Ball பேசிய அந்த ஓடியோ பதிவு தற்போது வெளியாகியுள்ளது. தாயார் ஆஸ்துமாவால் உயிருக்கு போராடுவதை அறிந்த சிறுமி, உடனே அம்மாவின் போனை எடுத்து 999 இலக்கத்திற்கு அழைத்துள்ளார்.
லண்டன் ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்த சிறுமி, தமது தாயாரின் நிலை குறித்து தெரிவித்துள்ளார். மட்டுமின்றி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் துணிச்சலாக பதிலளித்துள்ளார்.
Image: LAS
மேலும், ஆம்புலன்ஸ் சேவை அவர்களின் குடியிருப்புக்கு சென்று சேரும் வரையில் சிறுமியை தேற்றியுள்ளனர். மட்டுமின்றி, தங்கள் குடியிருப்பின் முகவரியை குறிப்பிட்டுள்ளதுடன், அவசர மருத்துவ உதவி குழுவினருக்கு குடியிருப்பின் கதவையும் திறந்து கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் தாயாருக்கு அவசர மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு, உடனடியாக குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த வாரம் லண்டன் ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகத்தால் சிறுமி Cali-Maii Ball ஆதரிக்கப்பட்டு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |