அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி)
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
12 ஆக உயர்வு
சிட்னி நகரில் யூதர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பிக்கும்போது மர்ம நபர்கள் இருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
🔴 10 DEAD, 1 SHOOTER KILLED: HORROR AT BONDI BEACH 🔴#TRAGEDY: Confirmed reports state 10 PEOPLE ARE DEAD, including NINE VICTIMS and ONE OF THE GUNMEN, following a devastating mass shooting at Bondi Beach during a Jewish #Hanukkah event in Sydney.
— IC (Intellectually Confused) (@IntConfused) December 14, 2025
* NSW Police confirm the… pic.twitter.com/XQgZaI6ycn
சிட்னியில் யூதர்களின் கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு! 10 பேர் மரணம்..தெறித்து ஓடிய மக்கள்
இந்த தாக்குதலில் முதலில் 10 பேர் பலியானதாக தெரிய வந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரி ஒருவரை பொலிஸார் சுட்டுக்கொன்ற நிலையில், மற்றவர் கைது செய்யப்பட்டார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
அவுஸ்திரேலிய அதிகாரிகள் இந்த சம்பவத்தை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்தனர். 
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 30 பேர் காயமடைந்ததாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லான்யன் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சிட்னியின் யூத சமூகத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டது என்று மாநில பிரீமியர் கிறிஸ் மின்ஸ் கூறினார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |