அவுட் ஆஃப் ஸ்டேடியம்! பிராவோ அடித்த 106 மீற்றர் சிக்ஸர் (வீடியோ)
MLC டி20 தொடரில் டிவைன் பிராவோ அடித்த சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியேற வீடியோ வைரலாகியுள்ளது.
வாஷிங்டன் வெற்றி
வாஷிங்டன் பிரீடம் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டல்லாஸில் நடந்தது.
முதலில் ஆடிய வாஷிங்டன் அணி 163 ஓட்டங்கள் குவித்தது. ஆனால் டெக்ஸாஸ் 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
To the Longest 6️⃣ of the #MLC2023 pic.twitter.com/aSBoybnWYp
— Texas Super Kings (@TexasSuperKings) July 17, 2023
பிராவோ வாணவேடிக்கை
எனினும் டெக்ஸாஸ் அணியில் டிவைன் பிராவோ ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவர் 39 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 76 ஓட்டங்கள் விளாசி களத்தில் நின்றார்.
குறிப்பாக, நோர்ட்ஜெ ஓவரில் பிராவோ அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்தை விட்டு வெளியே பறந்தது. அந்த சிக்ஸர் 106 மீற்றராக பதிவானது.
இதுதொடர்பான வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Bravo ♾?#TSKvsWSH #WhistleForTexas #MajorLeagueCricket pic.twitter.com/b5p7Fs6jnF
— Texas Super Kings (@TexasSuperKings) July 17, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |