இலங்கையிடம் உதைபட்டு அரையிறுதி வாய்ப்பை இழந்த வெஸ்ட்இண்டீஸ்! தோல்விக்கு பின் ஓய்வு முடிவை உறுதிப்படுத்திய நட்சத்திர வீரர்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதை வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ உறுதிப்படுத்தியுள்ளார்.
வியாழன் அன்று இலங்கை அணியுடன் தோல்வியடைந்து உலகக்கோப்பை அரையுறுதி வாய்ப்பை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது. இதன்பிறகே தனது ஓய்வை பிராவோ உறுதிப்படுத்தினார்.
18 வருடகால கிரிக்கெட் வாழ்வில் 38 வயதான பிராவோவின் இரண்டு முறை டி-20 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் ஒரு உறுப்பினராக இருந்துள்ளார். அதேநேரம் ஏழு டி-20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார்.
அவர் 2004 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார், பிராவோ மொத்தம் 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடி இரண்டிலும் சேர்த்து 3,188 ரன்களையும், 285 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
90 டி20 சர்வதேசப் போட்டிகளில் 78 விக்கெட்டுகளையும் 1245 ரன்களையும் எடுத்துள்ளார்.