ஐபிஎல் 2022! ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையை சமன் செய்த CSK வீரர்
ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையை சென்னை அணி வீரர் பிராவோ சமன் செய்துள்ளார்.
122 போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா இதுவரை 170 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
இந்த சாதனையை, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வீரர் பிராவோ சமன் செய்தார்.
4 ஓவர்கள் வீசிய அவர் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையும் படிங்க : படுதோல்வியடைந்த CSK! பெயருக்கு மட்டும் ஜடேஜா கேப்டனா? தோனி மீது எழுந்த விமர்சனம்
பிராவோ இதுவரையில் 152 போட்டிகளில் விளையாடி 489.3 ஓவர்கள் பந்துவீசி 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
அவரின் பந்துவீச்சு சராசரி 24.00 ஆக உள்ளது, அடுத்த வரும் போட்டிகளிலும் விக்கெட்களை அள்ளி இப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க தயாராகி வருகிறார் பிராவோ..!