என் பீல்ட் செட்டிங்களை மாற்ற சொல்லும் ஒரே நபர் இவர்! தோனி கூறியுள்ள சுவராஸ்யமான தகவல்
நான் வைக்கும் பீல்ட் செட்டிங்கை மாற்ற வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி கேட்டும் ஒரே வீரர் பிராவோ தான் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
நான்கு வெற்றிகள்
நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது.
இதில் நான்கு போட்டிகளை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான போட்டியில் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளது.
சென்னை அணியில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு பந்துவீச்சில் இந்த ஆண்டு அனுபவம் இல்லாத இளம் வீரர்களின் படையை கொண்டுள்ளது.
அந்த நபர் பிராவோ தான்
இதற்கிடையில் சமீபத்தில் பிராவோ குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் தோனி வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் "நான் அமைக்கும் பீல்ட் செட்டிங்கை மாற்ற வேண்டும் என என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒரே பவுளர் பிராவோ தான்!" என்று கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.
பிராவோ சமீபத்தில் ஓய்வு அறிவித்து இருந்து நிலையில், தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.