வெஸ்ட் இண்டீஸ் வீரர் Kieron Pollard காணவில்லை: பிராவோ பரபரப்பு புகார்
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் Kieron Pollard யை காணவில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் Dwayne Bravo நகைச்சுவையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அனைவரையும் சிரிப்பை உருவாகியுள்ளது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிலையில் அதில் களமிறங்கி Kieron Pollard இந்திய வீரர் சாஹல் வீசிய முதல் பந்துலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இந்த நிலையில் நடக்கவிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக வெளியேறியுள்ள Kieron Pollard, மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்பதும் சந்தேகமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் Dwayne Bravo தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Kieron Pollard என்ற நபரை காணவில்லை எனவும், யாரும் அவரை கண்டுபிடித்தால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியிடமோ, பொலிசாரிடமோ தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பின்குறிப்பாக Kieron Pollard வயது 34, உயரம் 1.85மீட்டர், இறுதியாக பார்த்தது சாஹலின் கால்சட்டை பாக்கெட்டிற்குள், என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இந்த பதிவிற்கு இந்திய அணி வீரர் குல்கர்னி, வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் சம்மி, பொல்லார்ட் போன்றார் பதில் அளித்துள்ளது வருகின்றனர்.
பொல்லார்ட் காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கவில்லை என்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டினாக நிக்கோலஸ் பூரான் செயல் படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.