பந்தால் அடித்த பிராவோ.. பதிலாக முத்தம் கொடுத்த பொல்லார்டு! வீடியோ
ஐபிஎல்-யில் நேற்றைய போட்டியில் தன் மீது பந்தை எறிந்த பிராவோவை, மும்பை வீரர் பொல்லார்டு முத்தமிட்ட சம்பவம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இரண்டாவது இன்னிங்சின் 14வது ஓவரை CSK வீரர் பிராவோ வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட பொல்லார்டு, stroke செய்துவிட்டு இரண்டு அடிகள் முன்னே வந்தார்.
உடனே பந்தை பிடித்த பிராவோ விளையாட்டாக பொல்லார்டை நோக்கி பந்தை ஏறிந்தார். பொல்லார்டு அந்த பந்தை தனது பேட்டால் விரட்டினார். பின்னர் பிராவோவின் அருகில் வந்து அவரது தலையில் முத்தமிட்டார்.
இந்த சம்பவம் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த பொல்லார்டு, பிராவோ இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் நிரூபித்துவிட்டனர்.
— Peep (@Peep_at_me) April 21, 2022