பிரேசிலின் 'மீட்பர் கிறிஸ்து' சிலை மீது தாக்கிய மின்னல்! அதிர்ச்சியில் ஆழ்த்தும் வைரல் படங்கள்
பிரேசிலின் 'மீட்பர் கிறிஸ்து' (Christ the Redeemer) சிலை மீது மின்னல் தாக்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
மின்னலால் தாக்கப்பட்ட உலக புகழ்பெற்ற சிலை
இயற்கையில் நடக்கும் சில நிகழ்வுகள் உங்களை வாயடைத்து வியக்க வைக்கும். அதிர்ஷ்டவசமாக, கேமராக்கள் மற்றும் சமூக ஊடக தளங்களின் இருப்பு, உலகில் நீங்கள் எங்கு இருந்தாலும், இதுபோன்ற ஒரு வகையான நிகழ்வுகளைப் பார்த்து ரசிக்க உங்களை அனுமதிக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு சமீபத்தில் பிரேசிலில் நடந்தது.
மீட்பர் கிறிஸ்து, பிரேசிலில் உள்ள புகழ்பெற்ற சிலை மின்னலால் தாக்கப்பட்டது. இந்த சிலை மின்னல் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Wikipedia/Fernando Braga
2 கோடி பேருக்கு மேல்
சிலையின் தலையில் மின்னல் தாக்கிய இச்சம்பவம் பிப்ரவரி 10-ஆம் திகதி நடந்தது. மின்னலின் படம் ட்விட்டரில் @Rainmaker1973 என்ற பயனரால் வெளியிடப்பட்டது.
இந்த பதிவை இதுவரை 2 கோடி பேருக்கு மேல் பார்க்கப்பட்டது. 2 லட்சத்திற்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டுள்ளது. மனதைக் கவரும் இந்தப் புகைப்படம் Fernando Braga என்பவரால் பிடிக்கப்பட்டது.
இந்தப் பதிவிற்கு கருத்துகள் நிரம்பி வழிகின்றன. புகைப்படத்தைப் பகிர்ந்த அதே பயனர், மின்னல் தாக்கிய அந்த தருணத்தில் அது கிறிஸ்து தானா அல்லது marvel Thor-ஆ என்று சந்தேகம் எழுவதாக கூறினார். ஆனால்,ஜோக் ஒருபக்கம் இருந்தாலும், இது மிகவும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும், மிக உயரமான இடத்தில் இருப்பதால், சரியான நேரத்தில் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார் என்றால் அது அவரது அதிர்ஷ்டம் என்று கூறினார்.
⚡️? pic.twitter.com/SCCEV8Yi6f
— Tiana Freeman (@tianasfreeman) February 11, 2023
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அமைந்துள்ள இந்த சிலையை ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மக்கள் பார்வையிடுகின்றனர்.
இச்சிலை கடந்த காலத்திலும் மின்னல் தாக்கியுள்ளது. 2014ல், மின்னல் தாக்கியதில் சிலையின் கட்டைவிரல் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.