ஐந்து முறை சாம்பியன் பிரேசில் அணியை உதைத்து வெளியேற்றிய கத்துக்குட்டி குரோஷியா
கத்தார் உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.
பிரேசில் அணி பரிதாபம்
கத்தார் உலகக் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பிரேசில் அணி, காலிறுதி ஆட்டத்தில் குரோஷியா அணியிடம் வெற்றியை இழந்துள்ளது.
@getty
மிகவும் பரபரப்பாக் நடந்த இந்த ஆட்டத்தில் பெனால்டி ஷூட்அவுட் முறையில் குரோஷியா அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதுமின்றி சம நிலையில் தொடர, கூடுதல் நேரத்தில் பிரேசில் அணியின் நெய்மர் ஒரு கோல் அடித்து வெற்றிவாய்ப்பை பிரகாசமாக்க,
@getty
ஆனால் கூடுதல் நேரம் முடிவடைவதற்குள் குரோஷியா அணியின் Bruno Petkovic ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
இதனையடுத்து பெனால்டி ஷூட்அவுட் முறை கொண்டுவரப்பட்டது.
இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி பரிதாபமாக வெளியேறியுள்ளது.