நார்வேயின் ஹாலண்ட் அசத்தல்: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பிரேசில்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பிரேசில் அணி வெளியேறியுள்ளது.
பிரேசில் வெளியேற்றம்
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் 5 முறை சாம்பியன்ஸ் ஆன பிரேசில் மற்றும் நார்வே அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க போராடினர். இருப்பினும் ஆட்டத்தின் முதல் பாதி கோல் எதுவும் இல்லாமல் முடிவடைந்தது.
ஆட்டத்தின் 14 வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்த நிலையில் அதனை தவறவிட்டனர்.
ஹாலண்டி அபாரம்
விடாமல் போராடிய நார்வே அணி, இரண்டாவது பாதியின் 79வது நிமிடத்தில் அந்த அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் முதல் கோலை அடித்து அசத்தினார்.

பிரேசில் அணி இந்த கோலை எப்படியாவது சமன் செய்து விட வேண்டும் என போராடிய போது, ஆட்டத்தின் 90 வது நிமிடத்தில் ஹாலண்ட் மற்றொரு கோலை அடித்து நார்வே அணியை முன்னிலைப்படுத்தினார்.
பின்னர் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் பிரேசில் அணியின் வீரர் நெய்மர் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
இருப்பினும் பிரேசில் அணி இந்த போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ள நார்வே அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |