பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் மரியோ சகால்லோ காலமானார்
பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் மரியோ சகால்லோ(Mario Zagallo) தனது 92 வயதில் காலமானார்.
மரியோ சகால்லோ
பிரேசில் அணியின் வீரராக இரண்டு முறையும், அணியின் பயிற்சியாளராக இரண்டு முறையும், அணி கால்பந்து உலக கோப்பையை வெல்வதற்காக மரியோ சகால்லோ(Mario Zagallo)முக்கிய பங்காற்றினார்.
கடந்த 1958 மற்றும் 1962-ஆம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை தொடர்களில் பிரேசில் அணியின் மற்றொரு ஜாம்பவானான பீலே உடன் இனைந்து விளையாடி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.
இதனைத்தொடர்ந்து, 1970 மற்றும் 1994-ஆம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியின் பயிற்சியாளராக இவர் செயல்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் உடல்நிலை குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மரியோ சகால்லோ கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
இவரது மறைவிற்கு பிரேசில் நாட்டில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |