கால்பந்து ஜாம்பவான் பீலே-வின் உடல்நிலையில் சரிவு: மருத்துவமனையில் அனுமதி!
உலக கால்பந்து போட்டிகளின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பீலே-வீன் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கால்பந்து பந்து ஜாம்பாவான்
உலக கால்பந்து ரசிகர்களால் மிகப் பெரிய ஜாம்பவான் என போற்றப்படும் பீலே தனது பிரேசில் நாட்டு கால்பந்து அணிக்காக பல சாதனைகளை செய்துள்ளார்.
வரலாற்றில் 1958, 1962 மற்றும் 1970 ஆகிய மூன்று உலக கோப்பைகளை வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை பிரேசில் கால்பந்து வீரர் பீலே பெற்றுள்ளார்.
Pele-பீலே(Image: twitter)
இதுவரை கால்பந்து விளையாடிய வீரர்களில் சிறந்த ஒருவராக எப்போதுமே பார்க்கப்படும் பிலே, பிரேசில் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரரும் ஆவார், மொத்தம் 92 ஆட்டங்களில் 77 கோல்களை பீலே அடித்துள்ளார்.
கிளப் அளவில் 659 ஆட்டங்களில் இருந்து 643 கோல்களுடன் சாண்டோஸின் எல்லா நேரத்திலும் அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையையும் பீலே கொண்டுள்ளார்.
pele with football world cups- pele with football world cups(Image: twitter)
மருத்துவமனையில் அனுமதி
கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோயுடன் தொடர்ந்து போராடி வரும் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பிரேசிலின் சாவ் பாலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீலே-வை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதய பிரச்சனையும் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும், அவர் மருத்துவமனைக்கு வரும் போது மிகவும் ஓய்வில்லாமல் இருந்ததாகவும் கூறியதாக தெரியவந்துள்ளது.
Brazil legend Pele- பிரேசில் ஜாம்பவான் பீலே (Image: INSTAGRAM@iamkelynascimento)
இது தொடர்பாக பீலேவின் மகள் கெலி நாசிமென்டோ வெளியிட்ட தகவலில், தனது தந்தையின் உடல்நிலை அவசர நிலையில் இல்லை, மற்றும் பயங்கரமான புதிய கணிப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் விரைவில் சில படங்களை வெளியிடுவேன் என்று உறுதியளிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Brazil legend Pele- பிரேசில் ஜாம்பவான் பீலே (Image: FRANCK FIFE/Getty Images)