உலகில் எந்த நாட்டு மக்கள் அதிக நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர் தெரியுமா? வெளியான முழு பட்டியல்
உலக அளவில் ஸ்மார்ட் போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரேசில் மற்றும் இந்தோனேஷியா உள்ளது.
தற்போது இருக்கும் உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மிகவும் அதிகமாகிவிட்டது. ஸ்மார்ட்போனிலே மக்கள் மூழ்கிப் கிடப்பதையும் பார்க்க முடிகிறது.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய ஆய்வறிக்கையில், உலக அளவில் ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் பிரேசில் மற்றும் இந்தோனேஷியா உள்ளது.
இங்கு நாள் ஒன்றிற்கு 5.30 மணி நேரம் மக்கள் நேரத்தை செலவிடுகின்றனர். இதற்கு அடுத்த படியாக, அதாவது மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு நாள் ஒன்றிற்கு சராசரியாக 4.9 மணி நேரம் செலவிடுகின்றனர்.
இந்தியாவைத் தொடர்ந்து தென் கொரியா (4.8 மணிநேரம்), மெக்ஸிகோ (4.7 மணி நேரம்), துருக்கி (4.5 மணி நேரம்), ஜப்பான் (4.4 மணி நேரம்), கனடா (4.1 மணிநேரம்), அமெரிக்கா ( 3.9 மணி நேரம்) மற்றும் பிரித்தானியா (3.8 மணி நேரம்) என்று ZDNetதெரிவித்துள்ளது.