கொரோனா உறுதியாவதற்கு முன் பிரித்தானியா பிரதமர் போரிஸை சந்தித்து கை குலுக்கிய பிரேசில் அமைச்சர்! வெளியான வீடியோ
கொரோனா தொற்று உறுதியாவதற்கு முன் பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் Marcelo Queiroga, பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் சந்திப்பில் ஈடுபட்டு கை குலுக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருகிற இந்த வேளையில் நடைபெறுகிற ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்துகொள்கிறார்கள்.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்திற்காக பிரேசில் ஜனாதிபதி Jair Bolsonaro உடன் நியூ யார்க் வந்துள்ள அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் Marcelo Queiroga -வுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, Marcelo Queiroga தனிமைப்படுத்துப்பட்டுள்ளார்.
தொற்று உறுதியான Marcelo Queiroga, 24 மணிநேரத்திற்கு முன் அதாவது திங்கட்கிழமை பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுடனான சந்திப்பில் கலந்துக்கொண்டு, அவரிடம் கை குலுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Brazil’s health minister (who met and shook hands with a mask-less Boris Johnson on Monday during meeting with Jair Bolsonaro) has announced he has Covid and is isolating. In this picture he sits on the far left. pic.twitter.com/U2ViRQAhXD
— Tom Phillips (@tomphillipsin) September 22, 2021
அன்றைய தினம், ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரேசில் ஜனாதிபதி Jair Bolsonaro ஆற்றிய உரையை கேட்க, Marcelo Queiroga ஐ.நா சபைக்கு சென்றுள்ளார்.
Brazilian Health Minister - who tested positive for Covid - was staying at the same hotel as President Biden in NYC.
— Raquel Krähenbühl (@Rkrahenbuhl) September 22, 2021
He went to the UN today to watch President Bolsonaro’s speech.
Here, he shakes hands with Prime Minister Boris Jonhson- who met Biden today at the White House. pic.twitter.com/CSxdBuTIfY
Marcelo Queiroga உடனான சந்திப்புக்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு சென்ற போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சந்தித்துள்ளார்.
The UK and US are staunch allies and the closest of partners.
— Boris Johnson (@BorisJohnson) September 21, 2021
We will stand side-by-side to protect our people and defend our values around the world.
???? pic.twitter.com/XeRm5KXAhs
சந்திப்புக்கு பின் பைடனுன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போரிஸ் பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் முகக் கவசம் அணியாமல் இருக்கின்றனர்.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்திற்காக நியூ யார்க் நகரத்திற்கு படையெடுத்துள்ள உலக தலைவர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.