பாரிஸ் நகரில் வெளிநாட்டு சகோதரிகள் இருவருக்கு நேர்ந்த துயரம்: உறுதி செய்த தூதரகம்
பிரேசில் நாட்டவர்களான பெண்கள் இருவர் ஈபிள் டவர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பாரிஸில் உள்ள பிரேசில் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆண்கள் இருவரை
பாரிஸ் நகரில் விடுமுறையை கழித்துவந்த அந்த சகோதரிகள் சனிக்கிழமை மதுபான விடுதி ஒன்றில் ஆண்கள் இருவரை சந்தித்துள்ளனர். அந்த நபர்கள் சகோதரிகள் இருவருக்கும் மதுபானம் அளித்ததாகவும், ஆனால் நள்ளிரவில் அந்த இருவரும் சகோதரிகள் இருவரையும் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சகோதரிகள் இருவருக்கும் தூதரக அலுவலகத்திலிருந்து சட்ட மற்றும் உளவியல் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@alamy
ஈபிள் டவர் அருகே
சம்பவத்தின் போது சகோதரிகள் இருவரும் தனிதனியாக சென்றதாகவும் ஈபிள் டவர் அருகே பூங்காவில் துஸ்பிரயோகம் நடந்ததாகவும் கூறுகின்றனர்.
இதில் மூத்த சகோதரி பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க, இளம் சகோதரி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் கருப்பு நிற வாகனத்தில் தப்பியதாகவும், சகோதரிகள் இருவரும் உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.