தித்திக்கும் சுவையில் கல்யாண வீட்டு பிரட் அல்வா.., இலகுவாக செய்வது எப்படி?
கல்யாண வீட்டில் பரிமாறப்படும் பிரட் அல்வா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு உண்ணும் ஒரு இனிப்பாகும்.
அந்தவகையில், சுவையான கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரட் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரட்- 15
- நெய்- 2 ஸ்பூன்
- முந்திரி- 15
- பாதாம்- 10
- திராட்சை- 10
- சர்க்கரை- 1 கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- பால்- 1 கப்
செய்முறை
முதலில் பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டியெடுத்து எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துகிள்ளவும்.
அடுத்து அதில் ஏலக்காய் தூள் சேர்த்து அதில் பொரித்த பிரட் துண்டுகளை சேர்த்து கெட்டியாகி வரும்வரை கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து அதில் பால் சேர்த்து கலந்து இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் திராட்சை சேர்த்து கலந்துகொள்ளவும்.
அவ்வளவுதான் சுவையான கல்யாண வீட்டு பிரட் அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |