தித்திக்கும் சுவையில் Bread malai toast.., எப்படி செய்வது?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை மிகவும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், வீட்டில் உள்ள பிரட் வைத்து சுவையான Bread malai toast எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரட்- 10
- எண்ணெய்- தேவையான அளவு
- சர்க்கரை- 3 ஸ்பூன்
- ஏலக்காய்- 2
- பால்- அரை லிட்டர்
- பால் பவுடர்- அரை கப்
- நெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் பிரட் சிறிய சிறிய சதுரமாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெட்டிவைத்த பிரட்டை பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கவும்.

இதற்கடுத்து பொரித்த பிரட்டை சர்க்கரை பாகில் பிரட்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலில் பால் ஊற்றி சூடானதும் அதில் பால் பவுடர், நெய் சேர்த்து பால் கோவா பதம் வரும்வரை கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக 2 பிரட் துண்டுகளின் நடுவில் செய்துவைத்த பால் கோவா கலவையை வைத்தால் போதும் சுவையான Bread malai toast தயார் .
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |